குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து முஸ்லிம் அமைப்புகளுடன் மாநில அரசு சமரச பேச்சு : கலக்கத்தில் திமுக தலைவர்கள்!

0
70

பல சர்ச்சைகளுக்கு நடுவே மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சியினர் நாடு முழுவதும் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் செய்து வந்தன. திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தங்கள் எதிர்ப்பைத் நூதனமான முறையில் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முஸ்லிம் அமைப்புத் தலைவர்களுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதில் சிஏஏ குறித்த குழப்பங்களை களையவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

இஸ்லாமிய அமைப்புகளை தங்கள் கூட்டணியில் வைத்துக் கொண்ட திமுக சிஏஏ-க்கு எதிராக தங்கள் போராட்டங்களை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை புரிந்து கொண்ட மாநில அரசு சண்டைக்காரர்களான இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் இனி திமுக இதில் அரசியல் செய்ய முடியாது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Parthipan K