தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்ற சிறப்பு திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை கோடம்பாக்கம் பகுதியல் உள்ள அண்ணா பிரதான சாலையில் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார்.
இதனை தொடர்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ந்த மானிய கோரிக்கையின் போது 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
இவை அனைத்தும் அடுத்த ஆண்டிற்குள் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.அதில் 104 என்ற அறிவிப்பின் படி தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதாகும்.இதில் முதற்கட்டமாக இந்த திட்டம் நேற்று அமைச்சர் அவர்களால் துவங்கப்பட்டது.
இதனையடுத்து இந்த ஆண்டிற்குள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை செய்யப்படும் என்றார்.பரிசோதனையின் போது உயர் சிகிச்சை தேவை படுவோருக்கு அரசு மருத்துவமனைகளில் பரிந்துரை செய்யப்படும்.
மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ரத்த அழுத்தம் ,நீரழிவு நோய் ,தொற்று நோய் ,தோல் நோய் ,ரத்த சோகை ,எலும்பியல் நோய் ,கண் நோய் ,பற்சிதைவு மற்றும் முழு உடல் பரிசோதனை போன்ற அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு முகாம் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஆர்.பிரியா மற்றும் துணை மேயர் மு.மகேஷ்குமார் கலந்து கொண்டனர்.