சுகப்பிரசவம் நடக்க வேண்டுமா? இந்த அரிசி தான் ஒரே தீர்வு!!
இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான அரிசி சித்த பெருமக்களால் கையாளக்கூடிய கருங்குறுவை அரிசி. இதற்கு கருங்குறுவை என்று பெயர் வந்ததற்கு காரணம் கரு என்றாலே கருவை உற்பத்தி செய்யக்கூடிய முக்கிய தன்மை இந்த அரிசியில் உள்ளது என்பதுதான்.
நம் உடம்பில் இருக்கக்கூடிய உயிர் அணுக்களே அல்லது நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. இதனை ஏன் சித்த பெருமக்கள் அதிகளவில் பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள் என்றால், மூலிகைகள் என்றாலே நல்ல குணம் மிகுந்து காணப்படும்.
அப்படிப்பட்ட மூலிகைகளையே சுத்தம் செய்வதற்கு இந்த கருங்குறுவை அரிசியின் பழைய சோற்று கஞ்சியை பயன்படுத்தி உள்ளனர். இவ்வாறு மூலிகைகளை இந்த கருங்குறுவை அரிசியின் மூலம் சுத்தம் செய்வதால் அந்த மூலிகைகளின் நற்குணங்கள் இன்னும் மேலோங்குவதை சித்த பெருமக்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த கருங்குறுவை அரிசியை நம் அன்றாட பயன்பாட்டில் இட்லியாக பயன்படுத்தலாம், கஞ்சியாக பயன்படுத்தலாம், மற்றும் நீராவியில் வேகக்கூடிய அரிசியாகவும் இதை பயன்படுத்தி வரலாம்.
சித்த மருத்துவத்தில் இந்த கருங்குறுவை அரிசி பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். கல்யாணமான பெண்களுக்கு குழந்தை உற்பத்தி ஆன பிறகு அந்த குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும், தாயின் சீரான ரத்த ஓட்டத்திற்கும் மற்றும் முக்கியமாக சுகப்பிரசவம் நடப்பதற்கும் இந்த கருங்குறுவை அரிசி முக்கிய பங்காற்றி வருகிறது.
இந்த கருங்குறுவை அரிசியை எட்டு மாத குழந்தை முதல் ஆயுட்காலம் முடியும் வரை அனைவரும் சாப்பிட்டு வரலாம். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கருங்குருவை அரிசியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.