ஒரு வாசகம் விடுபட்டதால் தனுஷ் மீது வழக்கு!! தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு!!
நடிகர் தனுஷ் மீது சைதாபேட்டையில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் ஏராளமான வெற்றிப் படங்களை தந்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பதற்கு அழகோ எந்தவித உடற்கட்டோ தேவையில்லை. திறமை இருந்தால் மட்டும் போதும் என்ற நிலையை கொண்டு வந்தவர் தனுஷ். அதனால் தான் இவர் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், மற்றும் ஹாலிவுட் வரை தனது முத்திரையை பதித்து உள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அமலா பால் இணைந்து நடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தை வொண்டர்பார் என்ற நிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் இயக்குநர்களாக தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் உள்ளனர்.
இதையடுத்து வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷ் நடித்த போது அதில் புகை பிடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்று இருந்தது. ஆனால் அந்த படத்தில் “புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு” என்ற வாசகம் இடம் பெறவில்லை. இதன் காரணமாக நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி மீது சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை இயக்குனர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.
இந்த சூழ்நிலையில் வழக்கு பரபரப்பான நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.