உலகில் அசைவ நாடு ரஷ்யா!! அப்போ சைவ நாடு எது தெரியுமா??
சைவ பிரியர்கள் ரஷ்யாவில் மிகவும் குறைவாக உள்ளனர்.
முன்பெல்லாம் அசைவு உணவு சாப்பிடுவதை பெருமையாக சொல்லுவர். ஏனெனில் ஏதேனும் ஒரு நாள்தான் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் அப்போது இருந்து வந்தது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மாரடைப்பு போன்ற காரணங்களால் அசைவ உணவின் மீதான மோகம் குறைந்துள்ளது.
தற்போது சைவ உணவுகளின் மீது மக்களுக்கு நாட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. நான் சைவம் என்பதை பலர் பெருமையாக கருதுகின்றனர். மேலும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சைவ பிரியர்களுக்கு என தனி பந்தியே நடக்கிறது. இது இந்தியாவில் மட்டும் தானா?? என கேட்டால் அது உண்மைதான். சைவ உணவு பிரியர்கள் அதிகமாக வாழும் நாடாக இந்தியா உள்ளதால் இனி உலகில் சைவ நாடு என இந்தியாவை சொல்லலாம்.
பல்வேறு செயல்களுக்கு புள்ளி விவரங்களை சேகரிக்கும் உலக அளவிலான அமைப்பு ஒன்று சேகரித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் உலகில் சைவ பிரியர்கள் அதிகம் வாழும் நாடாக முதல் இடத்தில் இந்தியா உள்ளது. சேகரித்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் வரை அசைவ உணவுகளை மக்கள் சாப்பிடுவதில்லை என தெரிய வந்துள்ளது.
அடுத்ததாக மெக்சிகோவில் 19 சதவீதம் பேரும் தைவானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும் ஆஸ்திரேலியவில் 12.1 சதவீதம் பேரும் சைவம் உண்பவர்களாக உள்ளனர்.
அதேபோல் உலகில் சைவம் குறைவாக சாப்பிடுபவர்கள் உள்ளநாடு ரஷ்யா ஆகும். அங்கு ஒரு சதவீதம் பேரே சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். மீதமுள்ள 99 சதவீத மக்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். எனவே உலகின் அசைவ நாடு என ரஷ்யாவை குறிப்பிடலாம்.
அடுத்ததாக அமெரிக்கா மற்றும் சீனாவில் 5 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுவதில்லை. அதேபோல் இங்கிலாந்தில் 10% பேரும் ஜப்பானில் 9 சதவீதம் பேரும் அசைவ உணவுகளை விரும்புவதில்லை என அந்த புள்ளிவிவர கணக்கு தெரிவிக்கிறது.