பயணிகள் கவனத்திற்கு!! என்ன குறை என்பதை தெளிவாக சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்!!
SETC பேருந்தில் மிக அதிக தூரம் பயணிப்பவர்கள் எப்பொழுதும் சில புகார்களை தெரிவிக்கின்றனர். இந்த பேருந்தில் பயணிப்பவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கு என்று சில இடங்களில் நிறுத்தப்படுகின்றது.
இந்நிலையில் பேருந்து நிற்கும் இடத்தில் அதிக விலையில் உணவு பொருட்கள் விற்கப்படுவதும் , சாப்பிடப்படும் பொருட்கள் துய்மையற்றும் சுகாதார மின்றியும் இருப்பதாகவும், முறையான கழிவறை வசதிகள் எதுவுமில்லை என்றும் இருந்தாலும் அவையாவும் சரியான பராமரிப்பில் இல்லை என்றும் பல புகார்கள் வருகின்றது.
இந்த புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி பொதுமக்களிடமிருந்து குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.அந்தநிலையில் அவர்கள் கூறும் கருத்துகள் எதுவும் தெளிவாக இல்லை என்பதால் குறைகளை சரி செய்ய முடியவில்லை.
இனி புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் குறை என்ன என்பதை தெளிவாக சொல்லி அந்த உணவகத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் மூலம் பெறப்படும் அனைத்து புகார்களின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த பேருந்துகளில் பயணிப்பவர்கள் நீண்ட தூரம் செல்கிறனர் என்ற சிரமத்தை தாண்டி உணவு மற்றும் கழிவறை வசதி போன்றவற்றில் தான் அதிக சிரமம் அடைகின்றனர்.இதில் இருந்து பெறப்படும் புகார்களினால் இது போன்ற தவறுகள் அனைத்தும் சரி செய்யப்படும் இனி மக்கள் அனைவரும் நிம்மதியாக பயணிக்கலாம்.