தமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை மிகவும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலையானது நூறு ரூபாயை தாண்டி உச்சம் தொட்டு கொண்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி, கேரட், பீன்ஸ் என அனைத்து காய்கறிகளுமே விலை ஏறிவிட்டது. இதனையடுத்து தற்போது மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு என அனைத்து மளிகை பொருட்களின் விலையும் தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
எனவே, இந்த விலைவாசி உயர்விற்கு எதிராக இபிஎஸ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வருகின்ற ஜூலை இருபதாம் தேதி காலை பத்து மணிக்கு அனைத்து மாவட்ட அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சாமானிய மக்கள் இந்த விலைவாசியால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், விலைவாசி உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என்று ஆரப்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக சார்பாக நடைபெறும் இந்த ஆரப்பாட்டத்தில் பொது மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதனால் விலைவாசி குறைக்கப்படுமா என்று மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.