மரத்துக்குள் புகுந்த கல்லூரி வாகனம் மாணவிகள் காயம்!!கூகுள் மேப்பால் வந்த சோதனை!!
கல்லூரி மாணவஏற்றி சென்ற பேருந்து மரத்துக்குள் மோதி விபத்துக்குள்ளானது.
ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 18 மாணவிகள் காயம் அடைந்து உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் தனியார் பிஎட் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் வண்டியை எடுத்துள்ளார்.
இந்த கல்லூரியில் இருந்து மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட 20 பேர் கல்லூரி பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
இப்பொழுதெல்லாம் பல பேர் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு கூகுள் மேப் போட்டு கொண்டு அது காட்டும் பாதையில் செல்வது வழக்கமாகிவிட்டது.அதுபோலவே ஓட்டுனரும் கூகுள் மேப் போட்டு மாணவிகளிடம் கொடுத்துவிட்டு ஒட்டி உள்ளார்.
அப்பொழுதுதான் பேருந்து ஓட்டுநர் மேப் பார்க்க பின்னாள் திரும்பி செல்போனை வாங்கியிருக்கிறார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக பேருந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. திடீரென பேருந்து மரத்தில் மோதியதும் மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில் பேருந்தில் பயணித்த மாணவிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன், விபத்து நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதன்பிறகு போக்குவரத்து அலுவலர் மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவிகளிடம் நலம் விசாரித்தார்.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.