மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
சென்னையில் மெட்ரோ சேவையானது கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சேவை சென்னையில் தினம் தினம் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது.
இந்த மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும், பிறகு எண்ணிக்கை பெருமளவில் உயரந்துள்ளது. தற்போது இந்த மெட்ரோவானது ஒரு புளூ லைன் மற்றும் இரண்டு கிரீன் லைன் பயன்பாட்டு பாதைகளையும், மேலும், மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டுள்ளது.
இந்த மெட்ரோவானது தினம் தினம் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளமான சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதாவது விழா கால சலுகை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதல் ரயில்கள் என சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது.
மெட்ரோ ரயிலானது பயணிகளின் வாழ்க்கையில் தினமும் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், தற்போது நீல நிற பாதையில் உள்ள விம்கோ நகரில் இந்த மெட்ரோ ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.
நீல நிற பாதையை பொறுத்தளவில், வடச்சென்னையின் சுங்கச்சாவடி மெட்ரோ நிறுத்தத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலுமே இந்த ஒரு மெட்ரோதான் உள்ளது.
இந்த மெட்ரோ ரயிலானது சுங்கச்சாவடியில் இருந்து விம்கோ நகருக்கு பதினெட்டு நிமிடங்களில் வந்து சேர்கிறது. அந்த வகையில், விம்கோ நகரில் இருந்து விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் பாதையில் மின் விநியோக கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு மெட்ரோ சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகரில் பயணிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
எப்போதுமே இங்கு இருக்கும் மக்கள் வேலைக்கு செல்வதற்கு தினம்தோறும் சிரமப்படுவார்கள். இதில் தற்போது மெட்ரோ சேவையும் இயங்காமல் இருப்பதால் மக்கள் கடும் அவதியை தினம் எதிர்கொள்கின்றனர்.
இந்த மின் விநியோக பிரச்சனையானது விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் மெட்ரோ சேவை துவங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.