இ சிகரெட் விற்பனைக்கு தடை!! மத்திய அரசு எச்சரிக்கை!!
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இ சிகரெட்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதை சில இணையதளங்கள் விற்பனை செய்து வருகிறது.
அதாவது தடை செய்யப்பட்ட இந்த இ சிகரெட்டுகளை தயாரிப்பது, அதை விற்பனை செய்வது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்வது, இந்த இ சிகரெட்டுகளை பதுக்கி வைப்பது, அதை விநியோகம் செய்வது உள்ளிட்ட பல செயல்களை ஏராளமான இணையதளங்களும் செய்து வருகிறது.
எனவே, இவ்வாறு விற்பனை செய்யும் பதினைந்து இணையதளங்களும் தங்களின் தயாரிப்புகள் குறித்த விளம்பரங்களையும், விற்பனையையும் நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேலும், இந்த நோட்டீசை பெற்ற 36 மணி நேரத்திற்குள் பதினைந்து நிறுவனங்களும் இதற்கு பதில் கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பதினைந்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் தங்களின் விற்பனையை நிறுத்தி விட்டது.
மீதமுள்ள பதினொரு நிறுவனங்கள் இன்னும் இந்த தடை நோட்டீசிற்கு எந்த வித பதிலும் அளிக்காமல் உள்ளது. ஒருவேளை இந்த நோட்டீசிற்கு எந்த வித பதிலும் வராத பட்சத்தில் அந்த இணையதளங்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எலக்ட்ரானிக் சிகரெட் தடை சட்டத்தின் கீழ் அபராதமும் விதிக்கப்படும் என்று இணையதள நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக இ சிகரெட்டுகள் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் திட்டவட்டமாக கூறி உள்ளது.