அவசர அழைப்பை மேற்கொண்ட பெண் கைது!! காரணத்தை கேட்டு கண் கலங்கிய போலீசார்!!
ஜப்பான் நாட்டில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களுக்கு அவசர அழைப்புக்காக எண்ணை அறிவித்துள்ளது.
அந்த நிலையில் அங்கு வசிக்கும் பெண் ஒருவர் அவசர அழைப்புகளை மேற்கொண்ட காரணத்தால் அவரை கைது செய்தனர் ஜப்பான் காவல் துறை அதிகாரிகள்.
பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது பெயர் ஹிரோகோ ஹடகாமி என்றும் அவருக்கு 51 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பெண் தொடர்ந்து அவசர அழைப்புகளை மேற்கொண்டு உள்ளூர் தீயணைப்பு வீரர்களின் நேரத்தை வீணடிப்பதாக அவரை கைது செய்தனர்.
அதற்கு அந்த பெண் நான் தனிமையில் இருந்து மிகவும் அவதிபடுவதாகவும் என்னை கவனித்து கொள்ள என்னுடன் யாரும் இல்லை என்றும் கூறினார்.
இதனால் யாரிடமாவது பேச வேண்டும் என்பதற்காக 2700 அவசர அழைப்புகளை தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.இது மட்டுமல்லாமல் எனக்கு கால் வழி மற்றும் வயிறு வழி ஏற்பட்ட பொழுது ஆம்புலன்ஸ்களை பலமுறை அழைத்ததாகவும் கூறினார்.
இவ்வாறு தனிமையில் இருந்ததால் அவரச அழைப்புகளை அழைத்ததாகவும் எவரும் என்னிடம் சிறிது நேரம் கூட பேசவில்லை என்றும் அதனால் தான் தொடர்ந்து இந்த 3 வருடங்களாக 2700 அவசர அழைப்புகளை தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.
இப்படி இந்த பெண் சொன்ன காரணத்தை கேட்ட காவல் துறை அதிகாரிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்து மனம் உருகினர்.