பாஜக வின் கனவு ஒருபோதும் பலிக்காது!! ஆவேசமாக பேசிய திருமாவளவன்!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்போது பிரதமர் மோடியை சீண்டும் விதமாக அவரை விமர்சித்து வருகிறார். அதாவது, இந்தியாவானது 26 எதிர்கட்சிகளை சேர்த்து ஒரு மாபெரும் கூட்டணியை அமைத்துள்ளதால்,
மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் பயம் வந்துவிட்டதாக கூறி உள்ளார். அனைத்து கட்சிகளும் இவ்வாறு ஒன்றுகூடி விட்டால் என்ன செய்வது என்று பாஜக பயந்ததற்கு ஏற்றவாறு,
26 கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த மாபெரும் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி ஆகும் என்றும் திருமாவளவன் கூறி உள்ளார்.
மேலும், மம்தா பானர்ஜி ஒரு பக்கம் செல்வார், அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பக்கம் செல்வார் மற்றும் ராகுலை அவர்கள் இந்திய பிரதமராக ஏற்க மாட்டார்கள் என்று பாஜக நினைத்து வந்தது.
ஆனால் பாஜக வின் முகத்தில் கறியை பூசும்படி 26 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டது. இதை பாஜக வால் துளியும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்று விட்டால் மோடி பிரதமர் ஆக பதவி ஏற்பார். ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி அடைந்தால் யார் பிரதமர் ஆவார் என்று நிச்சயமாக அனைவரிடமும் குழப்பம் ஏற்படும் என்று பாஜக திட்டம் தீட்டியதாக திருமாவளவன் கூறி உள்ளார்.
மேலும், தற்போது பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் தாம் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது பிரதமர் மோடியின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்று விமர்சித்துள்ளார்.
இவ்வாறு இவர் வார்த்தைகளை கொட்டி தீர்க்கும் போது மழையும் கொட்டி தீர்த்தது. ஆனால் மழையையும் எண்ணாமல் தனது மனத்தில் இருக்கின்ற அனைத்தையும் இவர் பேசி உள்ளார்.