மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!! 

0
31
Happy news for women!! Token distribution for rights has begun!!
Happy news for women!! Token distribution for rights has begun!!

மகளிர்க்கு ஹேப்பி நியூஸ்!! உரிமைத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது!! 

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

திமுக தேர்தலின் போது தனது வாக்குறுதிகளில் கூறிய மகளிர்க்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்கென மாவட்ட தோறும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்று டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. வீட்டிற்கு நேரடியாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் 1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என தெரிகின்றது.

இதன் காரணமாக ரேஷன் கடை ஊழியர்கள் முகாம் நடைபெறும் இடம், நேரம், நாள், ஆகியவற்றை குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கென ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து இல்லம் தேடிக் கல்வி பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவானது ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5;30  வரையிலும் நடைபெறும். தெருக்கள் மற்றும் வார்டுகள் அதற்கான  நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்பட்டிருக்கும்.

முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்களின் கைரேகை பதிவு  பயோமெட்ரிக் மூலம் ஆதார் எண் சரிபார்க்கப்படும். விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்பட்டு அதன் மூலம் விவரங்கள் சரிபார்க்கப்படும். எனவே முகாமிற்கு வரும் பொழுது கைபேசி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயது நிரம்பிய பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களிலும் தனித்தனியாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.