பள்ளிகளுக்கு வெளியான அதிரடி உத்தரவு!! பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்ததன் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க இருந்த நிலை மாறி பள்ளிகள் திறப்பு சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
முதலில் ஜூன் ஏழாம் தேதி திறப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததன் காரணமாக மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
எனவே, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14 ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசின் கீழ் செயல்படும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் முதலியவற்றில் அரசு கூறிய கட்டணத்தை விட மேலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரம்பூர் டான் பாஸ்போ பள்ளியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், அதை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணையில், அரசு கூறிய கட்டணத்தை மட்டுமே அவர்கள் வசூல் செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், அரசு கூறிய கல்வி கட்டணத்தை விட மாணவர்களிடம் அதிகமான கட்டணம் பெறப்பட்டால், சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.