மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!!

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!!

தற்போது தமிழகத்தில் மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் ஊழல் நடைபெற்று வருவதாக அனைத்து பகுதிகளிலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர்.

இதுப்போல ஊழல்கள் நடைபெறாமால் இருக்க “ஸ்மார்ட் மீட்டர்கள்” அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்துக் கொள்ளும்.

பிறகு இதற்கான மின் கட்டணம் அனைவர்க்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பொருத்துவதற்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதன் மூலமாக வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அதை மின்வாரிய அலுவலகத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். இதனையடுத்து இன்னொரு தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது, மின் மீட்டர்களுக்கு பதிலாக “புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை” இணைக்கும் திட்டத்தை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த புளூடூத் ஸ்மார்ட் மீட்டரை பொருத்திய பிறகு இதனை பைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலமாக கண்காணிக்கவும், சம்மந்தப்பட்ட நபர்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல்கள் அனுப்பவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இனிமேல் மின் கணக்கீட்டாளர்கள் தேவையில்லை, இந்த ஸ்மார்ட் மீட்டரே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்து விடும். மேலும், மின் ஊழியர்கள் மின் கட்டண விவரங்களை குறுஞ்செய்தியாக அனுப்ப சில நாட்கள் தேவைப்படும்.

ஆனால், தற்போது கணக்கெடுப்பு செய்த உடனேயே அதை அனுப்ப புதிய “மொபைல் செயலி” ஒன்று கொண்டு வரப்பட உள்ளது. இந்த செயலி அடுத்த வாரமே நடைமுறைக்கு வர இருக்கிறது.

இந்த செயலியை மின் ஊழியர்களின் மொபைலில் பதிவிறக்கம் செய்து, அதனுடன் ஒரு கேபிள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கணக்கெடுப்பின் போது மீட்டரில் இணைத்து மொபைலில் இணைத்து விட்டால்,

மீட்டரில் உள்ள மின் பயன்பாடு, கட்டண விவரம் அனைத்தும் செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். இது உடனடியாக நுகர்வோருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

இதற்கு முதலாவதாக உதவி பொறியாளர்களின் மொபைல் போனில் செயல்படுத்திவிட்டு, பிறகு அனைத்து வீடுகளிலும் இந்த முறை கொண்டு வரப்படும் என்று மின்வாரிய கூறி உள்ளது.