ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

0
46

ஒன்பது மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!! காரணம் என்ன??

கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி, உட்பட 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நிகழ்த்தியுள்ளனர். இந்த சோதனையானது பாமக பிரமுகர் திருவிடை மருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் 21 இடங்களில் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனை பற்றிய விவரம் வருமாறு:-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 45. இவர் பாமகவின் முன்னாள் நகர செயலாளராக இருந்துள்ளார். இந்த நிலையில் ராமலிங்கம் தனது மகனுடன் திருபுவனத்தில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு கும்பல் இவரை வழிமறித்து படுகொலை செய்தது.

இதற்கு காரணமாக திருபுவனம் பகுதியில் நடைபெற்று வந்த மதமாற்றங்களை இவர் தடுத்துள்ளார். மேலும் மத மாற்றம் செய்ய வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக இவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கசிந்ததை அடுத்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதி குறிச்சி மலையை சேர்ந்த முகமது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஸ்வான், அசாருதின் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பின்னர் இந்த வழக்கானது என்.ஐ.ஏவுக்கு  மாற்றப்பட்டதால் அவர்கள் தனியாக விசாரணை செய்து 12 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள், தகவல்களை திரட்டுவதற்காக நேற்று திடீரென 9 மாவட்டங்களில் 21 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் அதிகாலை 5.30 மணிக்கு  தொடங்கிய என்.ஐ.ஏ யின்  சோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி நிர்வாகிகள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்  அவர்களை நெல்லை முபாரக் அமைதிப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த சோதனை மோடியின் சோதனை. தஞ்சாவூர் வழக்கை தொடர்படுத்தி என கூறினாலும் இது அரசியல் காழ்புணர்ச்சியின் விளைவு என அவர் தெரிவித்தார்.சிறுபான்மையின மக்களை குறிவைத்து தாக்கும் இந்த என்.ஐ.ஏ வின் முகத்திரையை கிழிப்போம். நீதிமன்றம் மூலம் வழக்கை சந்திப்போம். என அவர் கூறினார்.

இதை போலவே திருச்சி, கோவை, திருப்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து நேற்று காலை முதல்  அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சோதனை குறித்து என்.ஐ.ஏ போலீசார் நேற்று டெல்லியில் கூறியதாவது,

ராமலிங்கம் மிகவும் கொடூரமான முறையில்  கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இரு சமூகத்தினருக்கிடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியது. அந்த வழக்கில் ஏற்கனவே சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களில்   நபீல்ஹசன், முகமது அலி ஜின்னா,சாகுல்ஹமீது, அப்துல் மஜீத், புர்கானாசுதீன், ஆகிய 5 பேர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக கோர்ட்டு அறிவித்துள்ளது. அவர்களை பற்றி   துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும், என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுடைய வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட இடங்களில் முக்கியமான ஆவணங்கள், செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் மெமரி கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.