பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!!
தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சில கருத்துக்களை கூறி இருக்கிறார்.
அவர் கூறியதாவது, தமிழக விளையாட்டு துறையும், HCL என்ற தனியார் நிறுவனமும் இணைந்து ஒரு மிதிவண்டி போட்டியை நடத்துகிறார்கள். இதை மூன்று வகையாக பிரித்து வயது வாரியாக நடத்த இருக்கிறார்கள்.
இந்த போட்டியில் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இதற்கு முழு பணத்தொகையையும் HCL நிறுவனம் தான் வழங்க இருக்கிறது.
இதில் பரிசு தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மேலும், அவர்கள் தங்கும் வசதிகளுக்கான செலவுகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார்.
இதனையடுத்து இவரிடம் சில அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு பதில் கூறிய உதயநதி ஸ்டாலின், பொதுமக்கள் கடந்த ஒன்பது வருடங்களாக பதினைந்து லட்சம் எப்பொழுது வருமென்று எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கருப்பு பணத்தை மீட்டால், மக்களுக்கு இந்த தொகை கிடைக்கும். அப்படி என்றால் பாஜக இன்னும் கருப்பு பணத்தை மீட்கவே இல்லை என்று தானே அர்த்தம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்திவிட்டு இரண்டாயிரம் நோட்டுகள் கொண்டுவரப்பட்டவுடன் கருப்பு பணம் அனைத்தையும் முடித்து விடுவோம் என்று கூறினார்கள்.
ஆனால், அந்த கருப்பு பணத்தை இன்று வரை மீட்கவில்லை. மேலும், மக்களுக்கு 15 லட்சத்தையும் கொடுக்கவில்லை. பிறகு எதற்காக இந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்தீர்கள்.
அந்த வகையில், தற்போது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளையும் தடை செய்ய இருக்கிறார்கள். எனவே, மக்கள் அனைவரும் பாஜக விடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி உள்ளார்.