Breaking News, Crime, News

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!

Photo of author

By CineDesk

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!

CineDesk

Updated on:

Button

புழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!

கடந்த 2018  ஆம் ஆண்டில் பயங்கரவாத வழக்கில் பிலால் மாலிக் பக்ருதீன் உள்ளிட்ட குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் சிறையின் உள்ளே மிகவும் வசதியாக இருப்பது போன்று புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது.

இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரின் பேரில் பத்திற்கும் மேற்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.

இதற்கு பிறகு புழல் சிறையில் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிறையில் ஒரு புகார் எழுந்துள்ளது.

அதாவது கைதி சரவணன் சிறையில் இருந்து வெளியே வந்து மறுபடியும் ஒரு புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சிறையில் இருந்து கொண்டே சென்னை உட்பட பல பகுதிகளில் இருக்கின்ற தனது நண்பர்களுடன் போலீஸ் பக்ருதீன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் போனின் மூலமாக அனைவரிடமும் வாட்சப் கால் மற்றும் வீடியோ கால் செய்து பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் சிறையில் ஏராளமான போன்களை வைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கைதி சரவணன் போலீஸ் பக்ருதீனிடம் பேசி வந்துள்ளார். இந்த விசாரணையில், போலீஸ் பக்ருதீன் பணிகளை கைதி சரவணன் செய்து வந்திருக்கிறார் என்பது தெரிய வந்தது

புழல் சிறையில் இருந்து கொண்டே இதுபோன்ற வேலை செய்தது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! 

தமிழகத்தில் அரிசியின் விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!