தமிழகத்தில் அரிசியின் விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

0
42
The price of rice has increased sharply in Tamil Nadu!! Common people in shock!!
The price of rice has increased sharply in Tamil Nadu!! Common people in shock!!

தமிழகத்தில் அரிசியின்  விலை கிடுகிடு உயர்வு!! அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.

பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.அந்த வகையில் பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் ஏழை எளிய மக்கள் ,நடுத்தர வர்க்கத்தினர் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இப்படி அத்தியாவசிய பொருட்களின் விலை ஒருபுறம் ஏறி கொண்டு போக தற்பொழுது அரிசியின் விலையும் உயந்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த மாதம் ரூ.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ அரிசி தற்பொழுது ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதனை தொடர்ந்து 25 கிலோ மூட்டை ரூ.1400 என்ற மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டு   வந்த நிலையில் தற்பொழுது விலை உயர்ந்து ரூ.1600 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் 25 கிலோ மூட்டை உள்ள இட்லி அரிசி  ரூ.850 என்ற மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டு   வந்த நிலையில் தற்பொழுது விலை உயர்ந்து ரூ.950  க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அந்த வகையில் பொன்னி அரிசி ஒரு கிலோ ரூ.45 க்கு விற்பனை செயப்பட நிலையில் தற்போது ரூ.55 க்கு விற்பனை செயப்படுகின்றது.இது மட்டுமல்லாமல் பிரியாணி அரிசி ரூ.95 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு காரணம் என்னவென்றால் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்ற அரிசியின் வரத்து  குறைந்துள்ளது. இதனால் உள் மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K