இனி 5 நாட்களுக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும்?? வெளிவந்த முக்கிய அறிவிப்பு!!
தற்போது வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டு வருகிறது. மேலும். ஒரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேப்போல், பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கி தொழிற்சங்கங்கள் அனைத்தும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
இந்த கோரிக்கையை அடுத்து வருகின்ற ஜூலை 28 வெள்ளிக்கிழமை அன்று இந்தியன் வங்கி சங்கம் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்த விடுமுறை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து நாட்களுக்கு மட்டும் வங்கிகள் இயங்க முடிவு செய்யப்பட்டால், ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவக் காப்பீடு ஆகிய தேவைகளை பற்றி யோசிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைக்கு நாங்கள் எந்த மறுப்பும் தெரிவிக்க மாட்டோம் என்று ஐபிஏ முன்மொழிவு நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இனி அனைத்து நாட்களிலும் வங்கிகள் கூடுதலாக நாற்பது நிமிடங்கள் திறந்திருக்கக்கூடும் என்றும் தைகள் வெளியாகி உள்ளது.
எனவே, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று தான் தெரிய வரும். தற்போது மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கி வருகிறது. ஆனால் இனி ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கி வரும் என்று கூறி விட்டால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.