தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…!

0
36

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…

 

தேசிய மகளிர் கால்பந்து ஷாம்பியன்ஷிப் தொடரின் சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார்.

 

27வது தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் தொடர் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசரஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் தொடரில் ஆனைத்து போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

தேசிய மகளிர் சேம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி ஹரியானா மகளிர் கால்பந்து அணியை சந்தித்தது. இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி இரண்டு கோல்கள் அடித்தது. ஹரியானா மகளிர் அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதனால் இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஹரியானா மகளிர் அணியை வீழ்த்தி தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி 27வது தேசிய மகளிர் சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

 

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற  முதல்வர் உலகக் கோப்பை 2023 நிகழ்ச்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார். மேலும் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை ஊக்குவிக்கும் வகையில் 60 லட்சம் ரூபாயை வழங்கினார். இந்த முதல்வர் உலகக் கோப்பை 2023 நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.