கவர்னரை இன்று சந்திக்கும் அண்ணாமலை!! திமுக FILES  பாகம் 2 வெளிவரப்போகிறதா??

0
116
Annamalai to meet the Governor today!! DMK FILES part 2 coming out??
Annamalai to meet the Governor today!! DMK FILES part 2 coming out??

கவர்னரை இன்று சந்திக்கும் அண்ணாமலை!! திமுக FILES  பாகம் 2 வெளிவரப்போகிறதா??

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தான் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களின் சொத்து பட்டியல் குறித்து வெளியிட்டார்.

இவர் திமுகவில் உள்ள பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர் பாலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அதில் மொத்தமாக திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது என்று கூறி இருந்தார்.

இதனையடுத்து திமுகவின் அடுத்த சொத்து பற்றிய பைல் பாகம் இஅரண்டு தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறி இருந்தார். அதில்,

திமுகவினரின் பைல்ஸ் பாகம் இரண்டு தயாராக உள்ளது. இதில் இருப்பது பினாமி சொத்துக்கள். இந்த பினாமிகளின் பெயரை வெளியே கூறி விடுவதா இல்லை ஆளுநரிடம் இதை ஒப்படைத்து விடுவதா?

ஏனென்றால், தமிழகத்தில் சிபிஐ அனுமதியை இவர்கள் எடுத்துக்கொண்டு, சிபிஐக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை இவர்களே செய்து வருகிறார்கள். முதல்வரின் மீதே சிபிஐ புகார் கொடுத்திருந்தோம்.

 அந்த துறையை தற்போது திமுக எடுத்துக்கொண்டதால் முதல்வர் இதிலிருந்து தப்பிக்க முடியாது. எனவே, இந்த பினாமிகளின் பெயர்களை பொதுவாக கூறி விடலாமா? ஆளுநரிடம் ஒப்படைக்கலாமா? அல்லது டிஜிபி இடம் ஒப்படைக்கலாமா? என்று கலந்தாய்வு செய்து வருகிறோம்.

 இதனைத்தொடர்ந்து திமுக வின் பைல்ஸ் பாகம் ஒன்றை பொறுத்தவரை 13 பேரின் சொத்து விவரங்களை கூறி உள்ளோம். பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் பேரில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் முதலியவை பற்றி கூறி இருக்கிறோம்.

 இதற்கு எல்லாம் கண்டிப்பாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் நான் பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மதியம் மூன்று மணிக்கு அண்ணாமலை நேரில் சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்பில், திமுகவின் சொத்து பட்டியல் பாகம் இரண்டை ஆளுநரிடம் இவர் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டாஸ்மாக் குறித்து வெள்ளை அறிக்கையையும் அண்ணாமலை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleதொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!
Next articleபொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!