தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!

0
36
The price of gold which continues to climb to the top continues to increase today!! Shocked public!!
The price of gold which continues to climb to the top continues to increase today!! Shocked public!!

தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!! 

தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுவதும்,இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று ரூ.80  குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று  என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு என தனி மதிப்பு உண்டு.

இத்தகைய தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. ஏழை,எளிய மக்கள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவு தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முதல் தங்கத்தின் விலையானது ஒருநாள் குறைவதும்,மறுநாள் உயர்வதும் என மக்களுக்கு விளையாட்டு காட்டி வந்த நிலையில் தற்போது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது. அதை நினைத்து மக்கள் மகிழ்வதற்குள் மீண்டும் இன்று அதிரடியாக ஒரு சவரனுக்கு  ரூ.136 உயர்ந்தது.

இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.136 அதிகரித்து  ரூ.44, 416 -க்கும்,  ஒரு கிராமிற்கு ரூபாய் 17  உயர்ந்து  ரூ.5,552 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் ஒரு கிராமிற்கு 40 பைசாக்கள் உயர்ந்து  ரூ.80.40 ஆகவும், கிலோவிற்கு ரூ.400 அதிகரித்து  ரூ.80,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்க நினைக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.