உடல்வலி தாங்க முடியலையா?? இதை செய்து பாருங்கள் உடனே வலி பறந்து போகும்!!
உடல் வலி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். குறிப்பாக அதிம வேலைப்பழு உள்ளவர்கள், நிம்மதியான உறக்கம் இல்லாதவர்கள், ஒட்டப்பந்தய அல்லது விளையாட்டு வீரர்கள், குடும்பத்தலைவிகள் என பலரையும் இது வாட்டி எடுக்கக்கூடியது.
இந்த குளிர் காலத்தில் பலருக்கும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே கஷ்டமான ஒரு காரியம் தான். கஷ்டப்பட்டு எழுந்த பிறகும் கூட பலருக்கும் அதிகப்படியான உடல் வலி இருக்கும்.
உடற்பயிற்சியை அதிகமாகச் செய்யும்போது, உங்கள் தசைகளுக்கு அதிக பளு கொடுக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அதிக எடையைத் தூக்குவது, அடிக்கடி கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது போன்ற காரணங்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.
மோசமான மெத்தையைப் பயன்படுத்தும் போது உடலுக்கு போதிய சப்போர்ட் கிடைக்காது. மேலும், அதில் இருக்கும் அதிகப்படியான தூசியாலும் ஒவ்வாமை ஏற்படும். அதிக காலம் ஒரே மெத்தையைப் பயன்படுத்தினாலும் கூட சில பாதிப்புகள் ஏற்படும்.
மேலும், சிலருக்குத் தசை விறைத்துப் போனது போன்ற உணர்வும் கூட ஏற்படும். பலருக்கும் இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருப்பார்கள். இதற்கு என்ன காரணம் இதை எப்படித் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மலைக்கற்றாழை
நல்லெண்ணெய்
ராகி மாவு
செய்முறை
முதலில் மலை கற்றாழையை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும் பின்பு அதில் உள்ள முட்களை நீக்கிவிட்டு வீட்டின் நிழலில் சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.
பின்பு அதன் மீது சிறிது நல்லெண்ணையை தடவி அடுப்பில் காட்டி சுட்டு எடுக்க வேண்டும்.
சுட்டெடுத்த பின்னர் அவற்றின் நடுப்பகுதியை கீறி அதன் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் இந்த சாற்றை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் ராகி மாவை சேர்த்து ஒரு பசை போல் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை உங்களுக்கு உடலில் எந்த இடத்தில் வலி ஏற்படுகின்றதோ அந்த இடத்தில் தடவி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து இதை நீக்கினால் அந்த இடத்தில் உள்ள வலி பறந்து போய்விடும்.