சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

0
115
Traffic change in these areas today!! Independence Day Rehearsal Program Begins!!
Traffic change in these areas today!! Independence Day Rehearsal Program Begins!!

சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!! இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

இந்தியா முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள கோட்டையில் நடைபெற இருக்கிறது.

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வரும் நான்காம் தேதி, பத்தாம் தேதி மற்றும் பதிமூன்றாம் தேதி ஆகிய மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. எனவே, இந்த மூன்று நாட்களும் ஒத்திகை நிகழ்ச்சிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது காலை ஆறு மணி முதல் ஒத்திகை முடியும் வரை சென்னை கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னம் முதல் இந்திய ரிசர்வ் பேங்க் வரை உள்ள ராஜாஜி சாலை அதேப்போல், கொடிமரச் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனைக்கு ராஜாஜி சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை ஆகிய பகுதிகள் வழியாக பாரிமுனையை சென்று அடையலாம்.

இதேப்போல், பாரிமுனையிலிருந்து காமராஜர் சாலைக்கு ராஜாஜி சாலை வழியாக வாகனங்கள் அனைத்தும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, இவிஆர் சாலிய, பல்லவன் சாலை, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று காமராஜர் சாலையை அடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொடிமரச் சாலி வழியாக அண்ணா சாலையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முதுசமை பாலம் மற்றும் ராஜா அண்ணாமலை மன்றம், என்எப்எஸ் சாலி வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

எனவே, சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் நடைபெறுவதால் மேலே கூறி உள்ளவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Previous articleவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றவது ஒருநாள் போட்டி… அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி!!
Next articleவங்கி ஒய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும்!! மாநில அரசின் அசத்தலான அறிவிப்பு!!