பிரம்மாண்டமாக மாறப்போகும் கோவை ரயில் நிலையம்!! தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு!!
கோவை மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையமானது முதன் முதலில் 1873 களில் திறக்கப்பட்டது. இதன் மூலம் மட்டும் சுமார் 1 கோடி பேர் பயனடைந்து வந்துள்ளனர்.இதன் மூலம் ரயில்வே துறைக்கும் அதிக அளவு வருவாய் ஈட்டப்பட்டது.
இந்த வகையில் கோவை ரயில் நிலையம்தான் அதிக அளவில் ரயில்வே துறை வருவாய் ஈட்டுவதில் 3 வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்றால் ரயில் நிலையம் முதல் இடத்திலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 2 வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே கோவையில் உள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.இந்த வகையில் அவற்றின் மேம்பாட்டு பணிக்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த பணிகளை தொடங்குவது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் அந்த பகுதி மாவட்ட ஆட்சியர்களிடம் வீடியோ கான்பிரன்ஸில் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கானொளியில் ஆட்சியர்கள் நிலம் கையகபடுத்த முடியாது என்றும் இருக்கும் இடத்தில் பிரமாண்டமாக கட்ட திட்டமிட வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
அதில் நவீன வசதிகளுடன் ஷாப்பிங் மால்கள் கட்டப்பட்டு லக்கேஜ்களை சோதனை செய்ய நவீன கருவிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படி அமைக்கும் இந்த திட்டத்தில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக குறிபிட்டா இடங்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்தி தர திடமிடப்படுள்ளது.
இது தொடர்பான திட்ட அறிக்கை விரைவில் சமர்பிக்கப்பட்ட உள்ளது.மேலும் அமைக்கபடும் புதிய மெட்ரோ ரயில் பாதை கோவை ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் இருக்க வேண்டும்.