முள்ளங்கியுடன் இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!! பிறகு மிகவும் ஆபத்தாகிவிடும்!!

0
690

முள்ளங்கியுடன் இதை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்!! பிறகு மிகவும் ஆபத்தாகிவிடும்!!

நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு காய்கறி தான் முள்ளங்கி இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது நமக்கு தெரியும். அதே அளவு இதை ஒரு சில ஆகாரங்களுடன் கலந்து சாப்பிட்டால் என்னென்ன தீமைகள் வரும் என்பது சிலருக்கு தெரியாது. எனவே முள்ளங்கியை பற்றி தெரியாத சில தகவல்களையும் அதன் பின் இருக்கும் தீமைகளையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

முள்ளங்கியின் நன்மைகள்:
இந்த முள்ளங்கி நம் உடம்பில் இருக்கக்கூடிய ஜீரண மண்டலத்தை துரிதப்படுத்துகிறது. மற்றும் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லா கொழுப்புகளை வெளியேற்றவும் உதவுகிறது. முக்கியமாக நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல் மற்றும் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடிய வேலையை இந்த முள்ளங்கி செய்கிறது.

மூலம் பிரச்சனை மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் கார்போஹைட்ரேட் இருப்பதால் நாம் எவ்வளவு இந்த முள்ளங்கியை சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. முள்ளங்கி சாறில் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை அளவு மிளகுத்தூளை சேர்த்து ஜூஸாக செய்து குடித்து வர சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக தீரும்.

அதேபோல் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த முள்ளங்கி ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. சளி இருமல் பிரச்சனையை சரி செய்கிறது மேலும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய விந்தணு குறைபாட்டையும் இந்த முள்ளங்கி சரி செய்கிறது.

மேலும் இதில் இருக்கக்கூடிய சில பண்புகள் நம் உடலில் பல வகையான கேன்சர் நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, விட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் சத்தானது சருமம் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளை மச்சம் மற்றும் படர்தாமரையை சரி செய்யக்கூடிய குணங்களும் இந்த முள்ளங்கியில் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய ஆன்ட்டி பியூரிட்டி குணங்கள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. காய்ச்சல் சரியாக முள்ளங்கி சாறுடன் சிறிதளவு மிளகுத்தூளை கலந்து குடித்தாலே போதும் உடனடியாக காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

இவ்வாறு முள்ளங்கியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்பட்டாலும் இதை அதிகமாக சாப்பிடாமல் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே சாப்பிட்டு வர வேண்டும். இது நம் முக்கியமாக தெரிந்து கொள்ள இருப்பது முள்ளங்கியுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை பார்ப்போம்.

1. முள்ளங்கியையும் பாலையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது அதேபோல் ஒன்றன்பின் ஒன்றாகவும் இதை இரண்டையும் சாப்பிடக்கூடாது. இதை ஒன்றாக எடுத்துக் கொண்டால் ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் சரும சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

2. அடுத்து முள்ளங்கி மற்றும் வெள்ளரிக்காயை கலந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. முள்ளங்கி வெள்ளரிக்காயை ஒன்றாக எடுத்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

3. இந்த வரிசையில் அடுத்து முள்ளங்கியுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளாத ஒரு காய்தான் பாகற்காய். ஏனென்றால் முள்ளங்கியையும் பாகற்காயும் ஒன்றாக சாப்பிடும்போது கேஸ் அசிடிட்டி போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தலைவலியும் ஏற்படலாம்.

4. அதேபோல் முள்ளங்கியை எடுத்துக் கொள்ளும் போது எலுமிச்சைச் சாறை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை இவ்வாறு எடுத்துக் கொண்டால் வெள்ளை மச்சம் மற்றும் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

Previous articleமூன்றே நாட்களில் கொழுப்பு கட்டிகள் பனி போல உருகும்!! இதை செய்யுங்கள்!!
Next articleமாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரணுமா?? இதை குடித்துப் பாருங்கள்!!