இந்த பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம்!! தொடங்கியது சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சி!!
இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான ஒத்திகை இன்று முதல் தொடங்குகிறது. அதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செயப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது இன்று, 10 மற்றும் 13 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால் காமாராஜர் சாலை, ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதியை வரையிலும், கொடிமரச் சாலையிலும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனைக்கு ராஜாஜி சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை ஆகிய பகுதிகள் வழியாக பாரிமுனையை சென்று அடையலாம்.
இதேப்போல், பாரிமுனையிலிருந்து காமராஜர் சாலைக்கு ராஜாஜி சாலை வழியாக வாகனங்கள் அனைத்தும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, இவிஆர் சாலிய, பல்லவன் சாலை, அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று காமராஜர் சாலையை அடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொடிமரச் சாலி வழியாக அண்ணா சாலையில் இருந்து பாரிமுனைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சிக்னல் சந்திப்பு, முதுசமை பாலம் மற்றும் ராஜா அண்ணாமலை மன்றம், என்எப்எஸ் சாலி வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.
ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் மூன்று நாட்களிலும் மேலே கூறி உள்ளவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.