டி20ல எப்பவுமே நாங்கதான் கெத்து… முதல் டி20 போட்டியை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி!!

0
106

 

டி20ல எப்பவுமே நாங்கதான் கெத்து… முதல் டி20 போட்டியை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி…

 

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர், டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில் இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் வென்றது. இந்நிலையில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி நடைபெற்றது.

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கே மெயர்ஸ் 1 ரன்னிலும் அதன் பிறகு களமிறங்கிய ஜேசன் சார்லஸ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க மற்றொரு தொடக்க வீரர் பிரண்டன் கிங் அவர்களும் அவருடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க தொடங்கினர். பிரண்டன் கிங் 28 ரன்களிலும் நிக்கோலஸ் பூரன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 

அதன் பின்னர் களமிறங்கிய ரோமன் போவெல் 48 ரன்கள் சேர்த்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், சஹால் தலா இரண்டு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 150 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமலும் ரன் எடுக்கவும் திணறி ஆடினர். தொடக்க வீரர்கள் சுப்மான் கில் 3 ரன்களிலும் இலான் கிஷன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் திலக் வர்மா அதிரடியாக 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சூரியக்குமார் யாதவ் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பொறுப்பாக விளையாடத் தவறினர்.

 

இதனால் கடைசி பந்துவரை சென்ற இந்த போட்டியில் கடைசி 1 பந்திற்கு 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த இந்தியா கடைசி பந்தில் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர், ஒபெட் மெக்காய், ரொமாரியோ சேப்பர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அகில் ஹூசைன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

 

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டி20 போட்டியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.