புதியதாக வர உள்ள “மிதக்கும் உணவகம்”!! அரசின் அசத்தல் அறிவிப்பு!!
பொது மக்களின் நலனுக்காக தமிழக அரசு தினம் தோறும் ஏராளமான புதிய திட்டங்களை அமல் படுத்தி கொண்டே இருக்கிறது. அதில் ஒரு வகை தான் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து வருவதாகும்.
அந்த வகையில், தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கின்ற முட்டுக்காட்டில் படகு இல்லம் ஒன்று அமைக்கப்படுவதாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது.
இங்கு பயணிகளை மகிழ்விப்பதற்காக மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் முதலியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டு கழிய தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதில் பயணிகளுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கத்தோடு மிதக்கும் உணவகம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக ரூபாய் ஐந்து கோடி திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் இயற்கையின் அழகை ரசித்தவாறே உணவை உண்டு மகிழலாம்.
எனவே, இதற்கான வேலைகள் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு முடிவடையும் என்று தமிழக சுற்றுலா வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இது போல ஏராளமான நடவடிக்கைகள் சுற்றுலா பயணிகளுக்காக தினமும் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மிதக்கும் உணவகம் அமைப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த சுவாரஸ்யமான ஒரு அனுபவத்தை வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக சுற்றுலா வளர்ச்சித்துறை கூறி உள்ளது.