நெல்சனின்  மறு பிரவேசம்!! மக்களின் மனதில் நிற்குமா?? ஜெயிலர்!! 

நெல்சனின்  மறு பிரவேசம்!! மக்களின் மனதில் நிற்குமா?? ஜெயிலர்!! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படம் இன்று வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட  நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், உள்பட பலர் நடித்த ஜெயலர்  படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி, அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த பட வெளியீட்டு விழாவை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு ஜெயிலர் படம் சென்னை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், போன்ற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில்  வெளியானது. மதுரையில் உள்ள ரசிகர்கள் சிறை கைதிகள் போல வேடமணிந்து ஜெயிலர் படத்தை பார்க்க வந்தனர்.

பிரபல நடிகரும் ரஜினிகாந்த் மருமகனும் ஆன  தனுஷ்  ஜெயிலர் படத்தை சென்னையில் உள்ள ரோகினி சில்வர்  ஸ்கிரீனில்  பார்த்தார். இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்கள்  முதல் காட்சி முடிவடைந்த நிலையில் அதன் விமர்சனங்களை  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

திரைப்பட விமர்சகர் ரமேஷ் பாலா  ஜெயிலர் படத்திற்கு 4/5 மதிப்பெண் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் டைகர் முத்துவேல் பாண்டியனாக  படம் முழுவதும் ரஜினிகாந்த் கம்பீரமாக, வீரமாகவும் வருகிறார். நல்ல அருமையான கதைக்களம், மற்றும் அற்புதமான இயக்கத்துடன் இந்த படம் நெல்சனின் மறுபிரவேசம் ஆகும்.

 

அதே போல அமுதா பாரதி ஜெயிலர் வின்னர் ஒன்மேன் ஆர்மி என கூறியுள்ளார்.