ED யின் சரமாரி கேள்வி!! எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை கதறும் செந்தில் பாலாஜி!!

0
57

மூன்றாவது நாள் விசாரணையில் முறையான பதில் தராமல் அடம் பிடித்த செந்தில் பாலாஜி

 

 

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.

 

இதையடுத்து அமலாக்கத்துறை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது.இதனை விசாரித்த நீதிபதி அல்லி,செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் 12 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறினார்.

 

இதனை தொடர்ந்து புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பதற்கான உத்தரவு புழல் சிறை நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. இதையடுத்து சிஆர்பிஎப் காவலர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீர்ப்பு வழங்கிய அன்று இரவே புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து வந்தனர்.மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் நாள் விசாரணையை அன்று இரவே தொடங்கினர்.கரூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.மேலும் இது தொடர்பாக ஐம்பதிற்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்தனர். மேலும் இந்த விசாரணை இரவு 11 மணி வரை நீடித்தது.

 

இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் விசாரணை நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் தொடங்கியது.விசாரணைக்கு முன் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதித்தனர். இதன் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.சட்ட விரோத பண பரிமாற்றம் செய்தது குறித்து கேள்விகளை எழுப்பிய அதிகாரிகள் இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றிய விவரங்கள் குறித்த அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.மேலும் அவற்றிற்கு செந்தில் பாலாஜி கூறிய பதில்களை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.மேலும் இந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

 

இதனை தொடர்ந்து மூன்றாவது நாள் விசாரணை நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது.இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபொழுது பண மோசடியில் ஈடுபட்டது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் இந்த மோசடிக்காக தங்கள் மீது சென்னை மத்திய குற்ற பிரிவில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது.இது பற்றி தங்களுக்கு தெரியுமா என்று கேட்டனர்.

மேலும் உங்கள் மீது மோசடி புகார் கொடுத்த அருள்மணி, தேவகாசயம், கணேஷ்குமார் ஆகியோர் உங்களை சந்திக்க காரணம் என்ன? என்று கேட்டனர்.அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி தன்னிடம் மனு கொடுப்பதற்காக கணேஷ்குமார் என்பவர் வந்தார் அதனால் அவரை தெரியும்.மேலும் மற்ற இருவர்களான அருள்மணி, தேவகாசயம் என்பவர்களை தனக்கு தெரியாது என்று கூறினார்.

 

இதனை தொடர்ந்து கணேஷ்குமார் உள்ளிட்ட மூவரிடம் எதற்காக உங்கள் உதவியாளர் சண்முகம் பணம் வாங்கினார்.மேலும் உங்கள் வங்கி கணக்கில் சுமார் 1.34 கோடி ரூபாய் மற்றும் உங்கள் மனைவி மேகலா வங்கி கணக்கில் 29.55 லட்சம் போடப்பட்டுள்ளது.மேலும் உங்களுக்கு பணம் வாங்கி தரும் ஆட்களாக செயல்பட்டு வந்த உங்கள் தம்பி மற்றும் உங்கள் நண்பர் கார்த்திகேயன் தான் உங்கள் இருவரின் வங்கி கணக்கிலும் இவ்வளவு தொகையை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்வளவு பணம் எப்படி வந்தது? என்று அதிகாரிகள் கேட்டனர்.

 

மேலும் இந்த வங்கி பண விவகாரம் குறித்து உங்கள் மனைவி மேகலாவிற்கு தெரியுமா? என்று அதிகாரிகள் கேட்டதற்கு இது குறித்து தான் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டதாக செந்தில் பாலாஜி கூறினார்.

 

இதையடுத்து உங்கள் தம்பி அசோக்குமார் கரூரில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டி வருகிறார்.இவ்வளவு பெரிய வீடு கட்ட அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது.மேலும் அவர் என்ன தொழில் செய்கிறார் என்று கேள்வி எழுப்பினர்.மேலும் உங்கள் சகோதரரின் மாமியார் பெயரில் 25 கோடி மதிப்புள்ள சொத்து வாங்கப்பட்டுள்ளது.நீங்கள் தான் அந்த நிலத்தை பினாமி பெயரில் வாங்கியுள்ளீர்கள் என்ற தகவல் கைப்பற்றப்பட்ட சொத்து பத்திர ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து தங்கள் பதில் என்ன? என்று அதிகாரிகள் கேட்டனர்.அதற்கு செந்தில் பாலாஜி தனக்கு நியாபகம் இல்லை என்று கூறினார்.

 

மேலும் செந்தில் பாலாஜி பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு நியாபகம் இல்லை மற்றும் தனக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.