உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் வாழைத்தண்டு சூப்!
வாழைத்தண்டு பலன்கள்;
வாழை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ பலனை கொண்டுள்ளது. வாழை இலையில் உணவு சாப்பிட்டால் நமக்கு தேவையான செரிமான சக்தியை கொடுக்கும். மேலும், வாழைப்பங்களில் அதிகளவு வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.
தினமும் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறும். நீங்கள் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டு சாறு செரிமானத்திற்கு மிகவும் சிறந்தது. இது குடல் இயக்கத்திற்கு நன்றாக உதவி செய்யும்.
இவ்வளவு நன்மை கொண்ட வாழைத்தண்டு சூப் எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம் –
நறுக்கிய வாழைத்தண்டு – 1 கப்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோள மாவு – 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு போட்டு, அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்னர், ஒரு கிண்ணத்தில் சோளமாவு போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், மிதமான தீயில் வேக வைத்த வாழைத்தண்டு தண்ணீரில் இந்த சோளமாவை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கினால், சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
வாரத்திற்கு இந்த சூப்பை 3 தடவை குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கிடுகிடுவென குறைய ஆரம்பித்துவிடும்.