இதை செய்தால் நகசுத்திக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிடலாம்!! இன்றே முயற்சி செய்யுங்கள்
நகசுத்தி என்பது பூஞ்சை மற்றும் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளால் உருவாகும் நோய் பாதிப்பாகும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே சரி செய்யாமல் விட்டோம் என்றால் விரலில் செப்டிக் ஆகி ஆபத்தான நிலையை காண நேரிடும்.இந்த நகசுத்தி விரல்களின் அல்லை பகுதியில் உருவாகி வலி,வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.இதனை இயற்கை முறையில் வீட்டிலேயே சரி செய்யலாம்.வெறும் 3 பொருட்களை பயன்படுத்தி நகசுத்தியை எளிதில் குணப்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
வேப்பெண்ணெய் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு தாளிப்பு கரண்டி எடுத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து வெது வெதுப்பாக சூடு படுத்த வேண்டும்.பின்னர் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை நகசுத்தி இருக்கும் விரல்களில் தடவ வேண்டும்.ஒரு நாளைக்கு 4லிருந்து 5 தடவை இவ்வாறு பயன்படுத்த வேண்டும்.இதனால் நகங்களில் இருக்கும் அழுக்கு,காயங்கள்,வீக்கம் உள்ளிட்டவை நீங்கி மீண்டும் நகசுத்தி வராமல் இருக்கும்.
மேலும் இதே போல் எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து நகசுத்தி இருக்கும் இடத்தில் வைத்தல்,மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாற்றை பேஸ்ட் போல் செய்து நகசுத்தி இருக்கும் இடத்தில் வைத்து வருதல் போன்றவற்றை செய்தாலும் இவை சரியாகும்.