உடலில் இருக்கும் கழிவுகளை வேரோடு பிடுங்கி எறியும் சுகபேதி செய்முறை!!

0
108
Sukhabedi method of uprooting the waste in the body!!
Sukhabedi method of uprooting the waste in the body!!

உடலில் இருக்கும் கழிவுகளை வேரோடு பிடுங்கி எறியும் சுகபேதி செய்முறை!!

நாவீன கால உணவு முறையில் அதிக ருசி இருந்தாலும் அதில் தேவையான சத்துக்கள் இருப்பதில்லை.இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலளவில் பல்வேறு மாற்றங்களை சந்தித்து நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றோம்.நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்களை தவிர்த்து துரித உணவுகளை எடுத்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனையால் எளிதில் பாதித்து விடுகின்றோம்.இதனை நாம் கண்டு கொள்ளாமல் விடுவதினால் இது குடல் சார்ந்த பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி விடுகின்றது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்

தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை,மலத்தை முறையாக கழிக்காமல் அவற்றை அடக்கி வைப்பது,குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது பொதுவான காரணங்களாக சொல்லப்படுகின்றது.

மேலும் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்,பழங்களை உணவாக எடுத்து வருவதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பு குறையும்.இதனை வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி சரி செய்ய முடியும்.இவ்வாறு செய்வதன் மூலம் மலச்சிக்கலுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை பழம்

*கல் உப்பு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் 3 லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பு பற்ற வைத்து மிதமான தீயில் அந்த தண்ணீர் பாத்திரத்தை வைக்க வேண்டும்.பிறகு கல் உப்பு 1 தேக்கரண்டி போட்டு நன்கு கலக்கி விடவேண்டும்.இதையடுத்து 3 பெரிய அளவு அதிக புளிப்பு நிறைந்த எலுமிச்சை பழத்தை அரிந்து அவற்றின் சாற்றை அதில் பிழிந்து கொள்ள வேண்டும்.தண்ணீர் சூடேறி வெது வெதுப்பான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

இதையடுத்து ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்து அதில் தேவைக்கேற்ப கல் உப்பு சேர்த்து கலக்கி அதனை குடிக்க வேண்டும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள உப்பு,எலுமிச்சை சாறு கலந்த 3 லிட்டர் தண்ணீரை தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்று பகுதியில் அடைப்பட்டு கிடந்த நாள்பட்ட கழிவுகள் அனைத்தும் சுகபேதியாகவும்,வாந்தியாகவும் வெளிவர தொடங்கும்.இதனால் குடல் சுத்தம் செய்யப்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் இந்த சுகபேதி செய்முறையை கடைபிடிக்கும் நாட்களில் காரம்,புளிப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது.இதற்கு பதில் தயிர் அல்லது மோர் சாதத்தை எடுப்பது அவசியம்.புளித்த தயிர் அல்லது மோரை உணவாக எடுத்து கொள்ள கூடாது.இந்த சுகபேதி செய்முறையை அவ்வப்போது எடுத்து வருவதன் மூலம் உங்களின் குடல் பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறி விடும்.இதனால் உடலில் ஏற்படும் மலச்சிக்கல்,வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

Previous articleமுகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைய பாட்டி சொன்ன அற்புத வைத்தியம்!!
Next articleசர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?