சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?

0
48

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இஞ்சி துவையல் : சுவையாக செய்வது எப்படி?

இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் அங்கியுள்ளன. மேலும், இஞ்சியில் விட்டமின் ஏ, சி, கால்சியம், பொட்டாசியம் உட்பட பல சத்துக்களை கொண்டுள்ளது. இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படும். மேலும், உடலில் ரத்த ஓட்டம் சீராக அமையும்.

இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை எப்படி சுவையாக துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

இஞ்சி – 200 கிராம்

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 7

துருவிய தேங்காய் – 1 கப்

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

புளி – தேவைக்கேற்ப

வெல்லம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் இஞ்சியை சுத்தம் செய்து, தோல் நீக்கி நறுக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில், உறுத்தப்பருப்பு, காய்ந்த மிளகாய், இஞ்சித்துண்டுகளை தனித்தனியாக போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை ஆறியதும், மிக்ஸியில் இந்த கலவையுடன் புளி, வெல்லம், துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்த கலவையை சேர்த்து இறக்கினால் சுவையான இஞ்சி துவையல் ரெடி.

 

 

 

 

author avatar
Gayathri