நாவுரும் சுவையான மீன் குழம்பு : சுவையாக செய்வது எப்படி?
கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும்.
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம்.
சரி வாங்க… மீன் குழம்பு எப்படி ருசியாக செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்:
மீன் – 1 கிலோ
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 2 ஸ்பூன்
வெந்தயம் – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 6 ஸ்பூன்
பூண்டு – 20 பல்
புளிக் கரைசல் – தேவையான அளவு
கடுகு – 2 ஸ்பூன்
அரைக்க:
தேங்காய் – 1 மூடி
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், மீனில் சிறிதளவு உப்பு, மஞ்சள் சேர்த்து பிசைந்து ஊற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இதன் பின்னர், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதன் பின்னர், பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கிய பின்னர், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்து வந்த பின்னர், அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்க்க வேண்டும். மசாலா புளிகரைசலுடன் சேர்ந்து கொதித்து கெட்டியானதும் மீனை போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பிறகு மீன் வெந்ததும், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயாராகிவிடும்.
இந்த மீன் குழம்பை, சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள ரொம்ப அருமையாக இருக்கும்.