ஐயம் வெய்ட்டிங்..!! எப்பொழுது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்! -நரேந்திரமோடி பேச்சு
கொரோனா பரவுவதை தடுக்க இந்தியாவில் கடந்த மாதல் 25 ஆம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதுவரை 17 நாட்கள் முடிந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமானதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இந்த ஆபத்தான சூழலில் மக்களின் விருப்பத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் மிகப்பெரிய உயிர்சேதத்தை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நரேந்திரமோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆன்லைன் மூலமாக ஆலோசனை நடத்தினார். இதன் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமல் செய்யப்பட்ட 21 நாட்கள் வருகிற செவ்வாய் கிழமை முடியவது, குறித்து முதல்வர்களிடம் கருத்துக்களை கேட்டார். பின்னர் அரசியல் மாற்றுக் கருத்துகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
மேலும், தான் வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் மாநில முதல்வர்கள் தொடர்பு கொண்டு பேசலாம், கருத்துக்களை பரிமாறலாம் என்றும் கூறியுள்ளார். நாம் ஒருவருக்கொருவர் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பலாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் 1 லட்சம் பேர் இறந்துள்ளனர். 17 லட்சம் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இன்னும் சில தினங்களில் முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.