மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

0
104
#image_title

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.

மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் மருந்துகளை நாம் பயன்படுத்துவோம். ஆனால் அந்த மருந்துகள் சேற்றுப் புண்களை குணப்படுத்தாது.

இந்த சேற்றுப் புண்கள் நம் பாதத்தில் எரிச்சலை உருவாக்கும். மேலும் தினமும் வலியை ஏற்படுத்துகின்றது. எனவே இந்த பதிவில் சேற்றுப் புண்களை குணப்படுத்தும் சில இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.

சேற்றுப் புண்களை குணப்படுத்தும் சில வழிமுறைகள்…

* முதலில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் மஞ்சள் பொடியை தேவையான அளவு எடுத்து அதில் சுடு தண்ணீரை சிறிதளவு சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். பின்னர் இதை சேற்றுப் புண் மீது தடவிக் கொள்ள வேண்டும். இதை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயோ சேற்றுப் புண்கள் மட்டுபடும்.

* வேப்பிலையை எடுத்து அரைத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை சேற்றுப் புண் இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலை சுத்தம் செய்வது போல பாதங்களை சுத்தம் செய்து பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அழிக்கின்றது.

* அகலமான பாத்திரத்தை வைத்து அதில் வெதுவெதுப்பான நீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு கைப்பிடி அளவு உப்பு சேர்த்து அதில் நமது பாதங்களை 10 நிமிடம் வைக்க வேண்டும். பின்னர் சுத்தமான துணியால் துடைத்துக் கொள்ள வேண்டும். இதை செய்து வந்தால் காலில் உள்ள கிருமிகள் அழியும். மேலும் சேற்றுப் புண் குணமடையும்.

* இரவில் மருதாணி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து அதை சேற்றுப் புண் இருக்கும் இடத்தில் தடவிக் கொள்ள வேண்டும். மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதை செய்து வந்தால் இரண்டு நாட்களில் சேற்றுப் புண் குணமடையும்.

* வெறும் தேங்காய் எண்ணெயை கால்களின் நடுவே தேய்த்து குளிக்கலாம். அல்லது தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளை சேர்த்து குழைத்து குளிக்க வேண்டும். இதனால் சேற்றுப் புண் குணமடையும்.

 

Previous articleமக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திமுகவினர் மோசடி: குற்றம் சாட்டும் சவுக்கு சங்கர்!!
Next articleஉடல் எடையை குறைக்கும் வரகு நெல்லிக்காய் சாதம் – சுவையாக செய்வது எப்படி?