நீங்கள் சுத்த சைவமா!!? அப்போது நீங்க இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும்!!!

0
81
#image_title

நீங்கள் சுத்த சைவமா!!? அப்போது நீங்க இந்த உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும்!!!

அசைவம் என்று அழைக்கப்படும் மாமிசம், மீன் ஆகிய உணவுகள் இல்லாமல் சைவம் என்று அழைக்கப்படும் வெறும் காய்கறிகள் மட்டும் சாப்பிடும் நபர்கள் இங்கு அதிகளவில் இருக்கின்றனர். அவர்களின் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பற்றியும் அந்த சத்துக்கள் கிடைக்கக் கூடிய உணவுப் பொருள்கள்கள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அசைவம் என்பது மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சிகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஆகும். சைவம் என்பது வெறும் காய்கறிகளை மட்டுமே தயாரிக்கப்படும் உணவு வகைகள் ஆகும். அசைவ உணவுகள் சாப்பிடுவதால் நன்மைகளும் ஏற்படுகின்றது. அதே அளவு தீமைகளும் அசைவ உணவுகளில் உள்ளது.

தற்பொழுது அசைவப் பிரியர்களிடம் சென்று நீங்கள் ஏன் அசைவம் அதிகம் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் சாதாரணமாக சுவைக்காக சாப்பிடுகிறோம் என்று கூறி முடித்து விடுவார்கள். அதுவே காய்கறிகள் சாப்பிடும் நபர்களிடம் சென்று நீங்கள் ஏன் அசைவம் சாப்பிட மாட்டீர்கள் என்று கேட்டால் “பாவம். உயிரின் சாபம். அந்த உயிரின் பாவமும் சாபமும் நமக்கு வந்துவிடும் என்று கூறுவார்கள்.

இந்த அசைவ உணவுகள் சாப்பிடாமல் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடும் நபர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருள்களும் அதில் உள்ள சத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

சைவம் பிரியர்களுக்கு தேவையான சத்துக்களும் அதற்கான உணவு பொருள்களும்…

* ஜின்க் சத்துக்கள்…

சைவம் மட்டும் சாப்பிடும் நபர்கள் ஜிங்க் சத்துக்கள் பெறுவதற்கு சீஸ், தயிர்(யோகர்ட்), சோயா பீன்ஸ் சாப்பிட வேண்டும்.

* இரும்புச் சத்துக்கள்…

இரும்புச் சத்துக்கள் கிடைப்பதற்கு பட்டாணி, கீரைகள், சர்க்கரை வள்ளிகிழங்கு சாப்பிட வேண்டும்.

* ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்…

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்துக்கள் கிடைக்க வால்நட்ஸ், சோயா பீன்ஸ், ஆளி விதைகள் சாப்பிட வேண்டும். மற்ற விதைகளில் இருந்தும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் சத்துக்கள் கிடைக்கும்.

* புரதச் சத்துக்கள்…

உடலுக்கு புரதச் சத்துக்கள் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். புரதச் சத்துக்கள் கிடைக்க பருப்பு வகைகள், குயினோவா, ஓட்ஸ், விதைகள் இவற்றை சாப்பிடலாம்.

* வைட்டமின் பி சத்துக்கள்…

வைட்டமின் பி சத்துக்களில் பல வகைகள் உள்ளது. வைட்டமின் பி சத்துக்கள் கிடைப்பதற்கு கீரை வகைகள், காளான், பால், வெண்ணெய் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* கால்சியம் சத்துக்கள்…

நமக்கு கால்சியம் சத்துக்கள் கிடைப்பதற்கு பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

* வைட்டமின் டி சத்துக்கள்…

நமக்கு வைட்டமின் டி சத்துக்கள் கிடைப்பதற்கு தயிர்(யோகர்ட்), காளான், சோயா பால் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

Previous articleநைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நீங்காளா!!? இதோ நீங்கள் ஃபாலோ பன்ன வேண்டிய மூன்று டிப்ஸ்!!!
Next articleஉங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் உள்ளதா!!? உடனே மருத்துவரை அணுக வேண்டும்!!!