செம்ம டேஸ்ட்.. கடலை மிட்டாய் சுவையாக செய்யும் முறை!!

0
150
#image_title

செம்ம டேஸ்ட்.. கடலை மிட்டாய் சுவையாக செய்யும் முறை!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த இனிப்பு பண்டமாக கடலை மிட்டாய் இருக்கிறது.இந்த கடலை மிட்டாயில் அதிகளவு புரதச் சத்து,இரும்பு மற்றும் செலினியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கடலை மிட்டாய் உடலின் சக்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு தசைகளை உறுதியாக வைக்க உதவுகிறது.இது மூளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது.இவ்வளவு நன்மைகள் கொண்ட கடலை மிட்டாயை சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

வேர்கடலை – 1 கப்

வெல்லம் – 200 கிராம்

ஏலக்காய் – 3

நெய் – 2 ஸ்பூன்

செய்முறை:-

1.அடுப்பு பற்றவைத்து வேர்க்கடலை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

2.பின்னர் ஒரு பாத்திரத்தில் 200 கிராம் வெல்லம் போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அது கெட்டி பதத்திற்கு வரும் வரை நன்கு கிளறவும்.

3.வெல்லப்பாகு சரியான பதத்திற்கு வந்து விட்டதா என்பதை அறிய அந்த பாகுவை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து ஒட்டி பார்க்கவும்.இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டி வந்தால், உங்கள் வெல்லாப்பாகு தயார் என அர்த்தம்.

4.பின்னர் உடனடியாக ஒரு அகலமான தட்டு எடுத்து அதில் நெய் தடவ வேண்டும் .பின்னர் வறுத்து தோல் நீக்கியுள்ள வேர்க்கடலை சேர்த்து காய்ச்சி வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து எந்த வடிவத்திற்கு வேண்டுமோ அதே போல் மாற்றி கொள்ளவும்.

பாகு சூடாக இருக்கும் பொழுதே மிட்டாய் செய்வது அவசியம்.ஆறிய பிறகு செய்தோம் என்றால் கடலை மிட்டாய் பதத்திற்கு வராது.