முன் நெற்றி ஏறி கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்க.. 30 நாளில் இழந்த முடியை மீட்டு விடலாம்!!

0
152
#image_title

முன் நெற்றி ஏறி கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்க.. 30 நாளில் இழந்த முடியை மீட்டு விடலாம்!!

நம் அனைவரும் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்தல்.அதுவும் முன் நெற்றி முடி உதிர்வு நம் மொத்த அழகையும் கெடுத்து விடுகிறது.இந்த முடி உதிர்வுக்கு மன அழுத்தம், தூக்கமின்மை,வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றம் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.இந்த முடி உதிர்வு பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் அவசியம் ஆகும்.இதற்கு இயற்கை முறை வழி சிறந்த ஒன்றாகவும்,எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

*கறிவேப்பிலை – 1 கொத்து

*பெரிய வெங்காயம் – 1

*கரிசலாங்கண்ணி – 1 கைப்பிடி

*கற்றாழை – 4 முதல் 5 துண்டுகள்

*செம்பருத்தி பூ – 5

*வெந்தயம் – 1 ஸ்பூன்

செய்முறை:-

1.முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து அதனை நன்கு அரைக்க வேண்டும்.

2.பிறகு அந்த சாறை வடிகட்டி இரவில் தலையில் காலையில் எழுந்து முடியை நன்கு அலசவும்.

3.கரிசலாங்கண்ணி கீரையை இரண்டு நாட்களுக்கு நிழலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

4.கற்றாழையை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

5.பின்னர் அடுப்பு பற்றவைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி கொள்ளவும்.அதில் செம்பருத்தி,கறிவேப்பிலை,கற்றாழை துண்டுகள்,வெந்தயம் மற்றும் காய வைத்த கரிசிலாங்கண்ணியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

6.அதிகபட்சம் 15 நிமிடங்கள் எண்ணெய் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

7.பின்னர் இந்த மூலிகை எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்க வேண்டும்.

8.இந்த மூலிகை எண்ணெய்யை இரவு தூங்கும்போது தலைக்கு தேய்த்து நன்கு மசாஜ் செய்து காலையில் ஷாம்பூ அல்லது சிகைக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இவ்வாறு தோடர்ந்து செய்து வருவதன் மூலம் முடி உதிர்வு தடுக்கப்பட்டு அவை அடர்த்தியாகவும்,நீளமாகவும் வளரும்.