Health Tips, Life Style

ஜென்மத்துக்கும் வாயு தொல்லை வராமல் இருக்கு இந்த 7 வழிகளை பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

ஜென்மத்துக்கும் வாயு தொல்லை வராமல் இருக்கு இந்த 7 வழிகளை பாலோ பண்ணுங்க!!

மனிதர்களுக்கு இருக்க கூடிய முக்கிய பிரச்சனை வாயு தொல்லை.இந்த வாயு தொல்லை இருக்கும் நபர்கள் பொது வெளியில் பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.இதனால் தர்ம
சங்கடமான சூழல் உருவாகி நிம்மதியை இழக்கும் நிலை ஏற்படுகிறது.உடலில் இருந்து வெளியேறும் வாயு நாற்றம் இல்லாதவரை எந்த பிரச்சனையும் இல்லை.ஒருவேளை அதிகப்படியான நாற்றம் ஏற்பட்டால் அதற்கு நிச்சயம் தீர்வு காண வேண்டும்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கவனிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.இந்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் முட்டை கோஸ், பட்டாணி,வெங்காயம்,காலிஃபிளவர்,பால் சம்மந்தமான உணவுகள்,முட்டை,உருளைக்கிழங்கு உள்ளிட்ட சில உணவு பொருட்களை அதிகம் உண்பது தான்.

அதேபோல் அதிகபடியான எண்ணெய் உள்ள உணவுகள்,சர்க்கரை அதிகம் உள்ள உணவு,கோதுமை உணவு,துரித உணவு(ஹோட்டல் புட்) போன்றவற்றாலும் வாயு  பாதிப்பு ஏற்படும்.நேரம் கடந்த பின்னர் உண்பது வாயு பாதிப்பை உண்டாக்கும்.வயிறு மந்த நிலையை அடைவது,மூச்சு பிடிப்பு, வயிற்றுப் போக்கு,மலச்சிக்கல்,உணவு சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாக,வயிற்றுப் பிடிப்பு போன்ற காரணிகள் வாயு தொல்லை அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.

வாயு தொல்லை நீங்க கடைபிடிக்க வேண்டிய 7 வழிகள்:-

1.இந்த வாயு தொல்லை நீங்குவதற்கு சாப்பிடுவதற்கு முன்னர் மற்றும் சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் தண்ணீர் குடிக்க கூடாது.

2.உணவை நன்கு மென்று பொறுமையா சாப்பிட வேண்டும்.அதிக எண்ணெய் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

3.கீரை உணவுவாக எடுத்துக்கொள்ளும் போதும் பழங்கள் சாப்பிடும் போதும் தயிர் மற்றும் பால் எடுத்துக் கொள்ளக்கூடாது.

4.துரித உணவுகள்,அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் வறுத்த கோழி உள்ளிட்ட உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

5.அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் அசைவம் சாப்பிடும் போது காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

6.வாயு தொல்லையால் அதிகமான பாதிப்பை சந்தித்து வருபவர்கள் புதினா டீ,சோம்பு,சீரகம், போன்ற ஜீரண சக்தியை மேம்படுத்த கூடிய உணவுகளை எடுத்து வருவது மிகவும் நல்லது.

7.முட்டை,சுண்டல்,அவரை கொட்டை,பாசிப்பயிறு,மக்காச்சோளத்தில் செய்த உணவுகள்,அதிக காரம் கொண்ட உணவுகள்,வேர்க்கடலை,உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுகள் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

செம்ம டேஸ்ட்.. கடலை மிட்டாய் சுவையாக செய்யும் முறை!!

குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?