டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

0
119
#image_title

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பிக்க முத்தான 5 வழிகள்!!

மழைக்காலங்களில் பரவும் நோய்களில் ஒன்று டெங்கு.தேங்கி இருக்கும் தண்ணீரில் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களால் கொசு புழுக்களை உற்பத்தியாகி அவை மனித உடலை கடிக்கும் பொழுது டெங்கு காய்ச்சலாக உருவாகிறது.பொதுவாக இந்த ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கும்.தற்பொழுது தமிழகம் முழுவதும் இந்த டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நாம் வசிக்கும் இடங்களில் தேங்கி இருக்கும் தேவையற்ற அசுத்தமான தண்ணீரை அகற்றுதல்,நீர் தொட்டிகளை மூடி வைத்தால் போன்றவற்றை முறையாக செய்து வருவது டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முறைகளில் ஒன்றாகும்.முன்னெச்சரிக்கையாக இந்த டெங்கு பாதிப்பதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்ற வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்க 5 வழிகள்:-

1.வெப்ப இலை 1 கைப்பிடி அளவு எடுத்து நன்கு அலசி கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேப்ப இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த பானத்தை அப்படியேவும் குடிக்கலாம் அல்லது தேநீரில் கலந்தும் குடிக்கலாம்.இந்த கசப்பு நிறைந்த வேப்ப இலைகளை ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.

2.பப்பாளி பழத்தின் நன்மைகள் தெரிந்த நமக்கு அதன் இலைகளின் மருத்துவ குணங்கள் தெரிவதில்லை.இந்த பப்பாளி இலை டெங்கு பாதிப்பில் இருந்து நம்மில் நிறைய பேருக்கு தெரிய வாய்ப்புகள் குறைவு.இந்த பப்பாளி இலை சாற்றில் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் அளவை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது.இதனால் டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் குணத்தை கொண்டிருக்கிறது.பப்பாளி இலைகளை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரில் இந்த பப்பாளி இலை சாற்றை கலந்து பருக வேண்டும்.

3.பாகற்காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இவை கசப்பு தன்மை கொண்டிருப்பதால் உணவில் சேர்த்து கொள்வதை பலர் விரும்புவதில்லை.ஆனால் இதன் கசப்பு தன்மை தான் நம் உடலுக்கு பல வித மருத்துவ குணங்களை அள்ளி தருகிறது.இந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.பின்னர் அதனை ஒரு டம்ளருக்கு மாற்றி பருக வேண்டும்.

4.நம் வீட்டில் எந்த பராமரிப்பும் இன்றி வளர்ந்து நிற்கும் துளசி இலைகளில் எக்கச்சக்க பயன்கள் இருக்கிறது.சளி பிடித்திருந்தால் துளசி இலைகளை பறித்து உண்பது வழக்கம்.ஆனால் இது டெங்கு பதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.இந்த துளசி இலைகளை பிளாக் டீயில் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் உடலுக்கு நல்லது.

5.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.நாம் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளியில் ஆகியவற்றில் அதிகளவு வைட்டமின் சி அதிகம் உள்ளது.பல்வேறு நோய் பாதிப்பால் ஆளாகி இருபவர்கள் மருத்துவரின் பரிந்துரை படி மேலே குறிப்பிட்டுள்ள முறைகளை பாலோ செய்யலாம்.

Previous articleஉடலில் உள்ள கெட்ட கொழுப்பு வேகமாக கரைய மிளகை இப்படி பயன்படுத்துங்க!!
Next articleபொடுகு தொல்லையால் அவதி படுகிறீர்களா? அப்போ இந்த 8 வழிகள் உங்களுக்கு தான்!