அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

0
105
#image_title

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

முன்னாள் முதலாவரும் அதிமுவின் பொதுக் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவை வலிமையான,அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாக மக்கள் மத்தியில் நிலைநாட்டி வரும் இபிஎஸ் அவர்கள் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிரடி காட்டி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக அதிமுக – பாஜக கூட்டணி முறிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் அதிமுக சிறு வாக்கு வித்தியாசத்தில் திமுகவிடம் தோற்றது.இதன் காரணமாக தான் தற்பொழுது வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஒரு சிலர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் ஆகாது என்பதால் தான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது என்று கருத்து கூறி வருகின்றனர்.

அதிமுகவின் கூட்டணி முறிவால் பாஜகவை விட திமுக தான் பீதியில் இருபாதகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.காரணம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் தமிழக மக்களின் ஓட்டு திமுகவுக்கு வந்துவிடும் என்று பகல் கனவில் இருந்து வந்தனர்.ஆனால் தற்பொழுது அதிமுக தனித்து போட்டியிடுவதால் அது திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது அதிமுகவை மேலும் வலுப்படுத்த புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருக்கிறார்.பழைய நிர்வாகிகளை நீக்கி 5 புதிய மாவட்ட செயலாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.மாவட்ட செயலாளர் மாற்றம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.இந்நிலையில் தான் நேற்று கட்சியை வலுப்படுத்தும் விதமாக கூடுதலாக 8 பேருக்கு பதவி கொடுத்து அதிரடி காட்டி இருக்கிறார் இபிஎஸ்.

அதன்படி தஞ்சாவூர்,தேனி,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை,நெல்லை மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.இதில் முதன் முறையாக திருவண்ணாமலை மத்திய மாவட்டடத்திற்கு பெண் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்ற 5 மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக தான் புதிய நபர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! 
Next articleடெங்கு காய்ச்சல் அதிகம் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!