பல் ஈறு வலியால் கஷ்டப் படுகிறீர்களா? அப்போ இந்த டீ செய்து குடித்து பாருங்கள் நல்ல தீர்வு கிடைக்கும்!!
ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் அவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால் குளிர்ந்த நீரை பருக முடியாது.ஈறுகளில் வலி ஏற்படும் பொழுது உணவை கூட சரியாக உண்ண முடியாமல் போகும்.இந்த வலியால் பற்கள் ஆரோக்கியத் தன்மையை இழந்து விடும்.பல் இடைவெளி போன்றவை ஏற்பட தொடங்கும்.இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம்.இயற்கை முறையில் கிராம்புவை பயன்படுத்தி இந்த பல் ஈறு வலி மற்றும் வீக்கத்தை சரி செய்ய முடியும்.
தேவையான பொருட்கள்:-
*கிராம்பு – 4
*தூயத் தேன் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
1.அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.
2.பிறகு நான்கு கிராம்பு சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
3.கிராம்புவின் சத்துக்கள் தண்ணீர் கொதிக்கும் நீரில் இறங்கிய பின் அடுப்பை அணைத்து விடவும்.
4.இதனை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 தேக்கரண்டி சுத்தமான தேன் கலந்து மிதமான சூட்டில் பருகவும்.இப்படி தின்தோறும் செய்து பருகி வந்தோம் என்றால் பல் சம்மந்தப்பட்ட பாதிப்பு,மூட்டு வலி,செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல பாதிப்புகள் விரைவில் குணமாகிவிடும்.