தினமும் தலைக்கு குளிப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்! மிஸ் பண்ணிடாதீங்க!!
மனிதர்களுக்கு உடல் சுத்தம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.அதுமட்டும் இல்லாமல் நம் அருகில் இருபவர்களுக்குக் தரமான சங்கடமான சூழலை உருவாக்கி விட கூடாது என்பதற்காகவே நாள் தோறும் குளிக்கும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.அதிலும் பெரும்பாலானோர் தினமும் தலைக்கு குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.இதனால் தலை சுத்தமாகும் மற்றும் தலை நறுமனமாக இருக்கும் என்று நினைத்து தலைக்கு குளிக்கும் பலருக்கும் தெரிவதில்லை அதில் உள்ள ஆபத்து என்னெவென்று.
தலைக்கு குளிப்பது நல்லது தான.அதில் மாற்று கருத்து இல்லை.இதில் நல்லது என்று சொல்வது வாரத்தில் 1 முறை அல்லது 2 முறை தலைக்கு குளிப்பது.ஆனால் தினமும் தலைக்கு குளித்தால் கூந்தல் தன் இயற்கை அழகை இழந்து விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நம் பாட்டி மற்றும் அம்மாக்களுக்கு அவர்களின் இளம் பருவத்தில் முடி நீளமாகவும், ஆரோக்யமாகவும் இருந்திருக்கும்.காரணம் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை சிறந்ததாக இருந்தது.
இன்றைய கால பெண்களுக்கு முடி முதுகை கூட தொட மாட்டங்குது.அப்டியே வளர்ந்தாலும் அடர்த்தி மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.நம் உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமோ அதேபோல் தான் கூந்தல் பராமரிப்பும் மிகவும் அவசியம்.அதற்காக தினமும் தலைக்கு குளித்தால் தலை சுத்தமாகி விடும்.முடி வளர்ச்சி அதிகமாகவிடும் என்று நினைப்பவர்கள் தான் பெரிய முட்டாள்கள்.முதலில் தலைக்கு அடிக்கடி குளிப்பதை தவிர்ப்பது தான் இருக்கின்ற முடிகளும் கொட்டாமல் இருக்க ஒரே வழி.ஒருவேளை தினமும் தலைக்கு குளித்தால் என்ன ஆகும்? நான் அப்படி தான் குளிப்பேன் என்று இருக்கும் நபர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தினமும் தலைக்கு குளிப்பதால் முடிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:-
*டெய்லி தலைக்கு ரசாயனம் நிறைந்த ஷாம்பு பயன்படுத்தியோ அல்லது வெறும் தலைக்கோ குளிப்பதினால் தலைமுடியின் இயற்கையான அழகு சிதைந்து விடும்.பொதுவாக மனிதர்களுக்கு கூந்தலில் இயற்கையாவே எண்ணெய் பசை இருக்கும்.ஆனால் நாம் தலைக்கு குளிப்பதால் அந்த எண்ணெய் பசை நீங்கி கூந்தல் கடும் வறட்சியாக மாறி விடும்.
*தினமும் தலைக்கு குளிப்பதால் முடிகள் சிக்கு போட்டு விடும்.இந்த சிக்கை எடுப்பதற்குள் பாதி முடி வந்துவிடும்.
*அதேபோல் தினமும் குளிப்பதால் தலையில் உள்ள ஈரப்பதம் குறையும்.இதனால் கூந்தல் வறட்சியாக மாறி அரிப்பு பிரச்சனை ஏற்படும்.
*நாள் தவறாமல் தலைக்கு குளிப்பதால் பொடுகு பாதிப்பு கூடவே வந்து விடும்.இதனால் தலைமுடி உதிர்வு அதிகளவில் ஏற்படும்.
*அதேபோல் தலைமுடி அடர்த்தி குறைவு,தலைமுடி வெடிப்பு மற்றும் உடல் சூடு உள்ளிட்டவை நமக்கு ஏற்பட தொடங்கி விடும்.இந்த பாதிப்பில் இருந்து முடிகளை பாதுகாக்க சிறந்த தீர்வு வாரத்தில் 1 முறை தலைக்கு குளிக்க வேண்டும்.தினமும் தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டும்.தலைக்கு குளிக்கும் பொழுது ரசாயணம் கலந்த ஷாம்புக்களை உபயோகிப்பதை தவிர்த்து சீகைக்காய் உள்ளிட்ட இயற்கை வகைகளை பயன்படுத்துவது நல்லது.