உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக உள்ளதா!!! இதோ அதை போக்க எளிமையான டிப்ஸ்!!!

0
107
#image_title

உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகமாக உள்ளதா!!! இதோ அதை போக்க எளிமையான டிப்ஸ்!!!

நம்மில் சிலருக்கு மோசமான வாய் துர்நாற்றம் இருக்கும். இதை போக்க நாம் பலவிதமான டூத் பேஸ்டுகளை பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது எதுவும் துர்நாற்ற பிரச்சனையை சரி செய்து இருக்காது. இந்த பதிவில் நமக்கு ஏற்படும் வாய் துர்நாற்றம் பிரச்சனையை சரி செய்வதற்கு எளிமையான வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக வாய் துர்நாற்றம் என்பது காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் இருப்பதாலும் ஏற்படும். மேலும் நமது குடலில் புண்கள் இருந்தாலும் நமக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். குடல் புண்கள் இருந்தால் அதை குணப்படுத்தினால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

மேலும் இரண்டு வேளைகள் பல் துலக்க வேண்டும். இதனாலும் வாய் துர்நாற்றம் பிரச்சனையை சரி செய்ய முடியும். சரி அடுத்து வாய் துர்நாற்றம் பிரச்சனையை சரி செய்வதற்கான எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வாய் துர்நாற்றம் பிரச்சனையை சரி செய்ய எளிமையான டிப்ஸ்…

* நாம் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டு 4 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன். மூலமாகவும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

* கொத்தமல்லி தழையை வாயில் போட்டு மென்று வர வாய் துர்நாற்றம் நீங்கும்.

* புதினா சாறு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த இரண்டையும் கலந்து கொண்டு அதை வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

* எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் உப்பு சிறிதளவு சேர்த்து குடித்து வந்தால் வாய். துர்நாற்றம் நீங்கும்.

* நாம் சாப்பிடும் உணவுகளில் புளிப்பு, காரம் ஆகியவை குறைவாக இருந்தால் நல்லது. மேலும் காரம், புளிப்பு போன்ற உணவுகளை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Previous article5 ரூபாய் செலவு செய்தால் போதும் வெறும் 2 நிமிடத்தில் நாள்பட்ட கழுத்து கருமையை நீக்கிவிடலாம்!! அனுபவ உண்மை!
Next articleஉயிர் பயத்தைக் காட்டும் டெங்கு காய்ச்சல்!! தப்பிக்க இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!! உரிய பலன் கிடைக்கும்!!