Health Tips, Life Style

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

Photo of author

By Divya

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

Divya

Button

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை மற்றும் உணவு என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பில் கொண்டு சேர்த்து விடுகிறது.இதனால் உடலில் பல்வேறு நோய் பாதிப்புகள் உருவாக எளிய வழியை நாம் வகுத்து விடுகிறோம்.எனவே இந்த தீராத மலச்சிக்கல் பாதிப்பை எளிதில் தீர்க்கும் பானம் ஒன்றை தயார் செய்து பருகி பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரம் பூவை பொடி செய்து அதில் தேநீர் தயாரித்து பருகி வந்தோம் என்றால் வறண்ட மலம் வெளியேறுதல்,மஞ்சள் காமாலை,நீரிழிவு நோய் உள்ளிட்டவை குணமாகும்.அத்தோடு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் ஆவாரம் பூவிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

ஆவாரம் பூ – ஒரு கைப்பிடி அளவு

தேன் – தேவையான அளவு
அல்லது
நாட்டு சர்க்கரை

செய்முறை:-

1)மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரம் பூவை நிழலில் காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

2)அடுப்பில் ஒரு டீ பாத்திரத்தை வைத்து 11/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
பின்பு அதை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

3)அதன் பிறகு காய வைத்து எடுத்து வைத்துள்ள ஆவாரம் பூவில் 1 கைப்பிடி அளவு போட்டு இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

4)பின்னர் இந்த ஆவரம்பூ டீயை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.இதில் சுவைக்கேற்ப தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி?

மணமணக்கும் “சாம்பார் தூள்” இனி வீட்டிலேயே செய்யலாம்!! தெளிவான விளக்கம் இதோ!!