இந்த முறையில் செய்தால் “தக்காளி ஊறுகாய்” 6 மாதம் வரை கெட்டுபோகாது!! 100% சுவையாக இருக்கும்!!

0
80
#image_title

இந்த முறையில் செய்தால் “தக்காளி ஊறுகாய்” 6 மாதம் வரை கெட்டுபோகாது!! 100% சுவையாக இருக்கும்!!

அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் இஞ்சி ஊறுகாய், மாங்கா ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று தக்காளி ஊறுகாய்.இந்த தக்காளி ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*தக்காளி – 1 கிலோ

*நல்லெண்ணெய் – 300 மில்லி

*புளி – 100 கிராம்

*வெந்தயம் – 1 1/2 தேக்கரண்டி

*கடுகு – 4 தேக்கரண்டி

*கல் உப்பு – 250 கிராம்

*பூண்டு – 100 கிராம்

*மிளகாய் தூள் – 200 கிராம்

*வர மிளகாய் – 6

*பூண்டு – 1 கைப்பிடி

*கறிவேப்பிலை – 1 கைப்பிடி

*பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 1 கிலோ தக்காளி பழத்தை கொட்டி நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.பின்னர் அதை ஒரு தட்டிற்கு .மாற்றி தக்காளி மேல் தண்ணீர் இல்லாமல் அதை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து அதனுடன் 50 மில்லி அளவு நல்லெண்ணெய் ஊற்றி 5 நிமிடங்கள் வேக விடவும்.பின்னர் 100 கிராம் புளியை அதில் சேர்க்கவும்.மீண்டும் ஐந்து நிமிடங்கள் வேகவிடவும்.இதனிடையே மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து அதில் வெந்தயம்,கடுகு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் தக்காளி வேகும் பாத்திரத்தில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும்.பிறகு தக்காளி குழைய வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.இந்த தக்காளி நன்கு ஆறிய பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.அதோடு வறுத்து வைத்துள்ள வெந்தயம் + கடுகும் சேர்த்து அரைக்கவும்.இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும்.

இதன் பின் அடுப்பில் கடாய் வைத்து அதில் 250 மில்லி நல்லெண்ணெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் கடுகு சேர்க்கவும்.அவை பொரிந்து வந்ததும் அதில் வெந்தயம் சேர்க்கவும்.

பிறகு அதில் வர மிளகாயை கிள்ளி போடவும்.அதோடு ஒரு கைப்பிடி அளவிற்கு இடித்த பூண்டு, ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை விட்டு பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.பிறகு அடுப்பை அணைக்கவும்.

இவை நன்கு ஆறியபின் ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு சேமித்து வைக்கவும்.இப்படி செய்தால் தக்காளி ஊறுகாய் 6 மாதம் வரை கெடாமல் சுவையாக இருக்கும்.

Previous articleகுளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?
Next articleடெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!